தாயின் கருவறையில் தொடங்கும் வாழ்கையென்னும் ஓர் பயணம்,
அதில்,
அன்னை நம்மிடம் அள்ளிவார்க்கும் அளவில்லா
அன்பிலே ஓர் பயணம்,
நம் வருங்காலத்திற்கு தோள்கொடுக்கும் தந்தையின்
ஊக்கத்திலே ஓர் பயணம்,
நம் நம்பிக்கைக்கு ஆளாகி ஆசிர்வாதம் புரியும் இறைவனின்
அருளிலே ஓர் பயணம்,
நம் வெற்றியிலும் வீழ்ச்சியிலும் தோள்சேரும் நண்பனின்
நட்பிலே ஓர் பயணம்,
நாம் இவளுக்காக வீழ்வதும் ஒரு சுகமென காதலியின்
காதலிலே ஓர் பயணம்,
நம்மை வெற்றிக்கு வித்திடும் நல்லுறவினர்கனின் பாச
பரிவிலே ஓர் பயணம்,
நம் சோதனைக்கும் சாதனைக்கும் அடிபடையாக காணும்
கனவுகளிலே ஓர் பயணம்,
அபாய சறுக்கு நிலத்தில் இரு ஊன்றுகோள்கலென
கல்வியிலே,செல்வத்திலே ஓர் பயணம்,
மேற்கண்ட பயணங்கள் நம்மை இன்பத்திலே துன்பத்திலே ஆழ்த்தினாலும்
இதில்,
ஓட்டுநராகவும் நடத்துநராகவும் நாம் இயங்கி, இவ்வாழ்கைப் பயணத்தை
நல்வழியில் வழிநடத்தி வென்றிடுவோம் வாருங்கள் !!!!!
- விக்கி
No comments:
Post a Comment