இரவெல்லாம் நான் உறங்கும் நேரம்,நீ கண்விழித்து வெளிச்சம் காத்தாய்..!!
ஆடம்பர நிறங்கள் பல இருந்தும், நீ வெந்நிறம் சூடி எளிமை காத்தாய்..!!
அழகென்னும் சொல்லுக்கு இலக்கணமாக ,நீ ரதியென்னும் பெயர்பெற்று விளங்கினாய் !!
விடிவெள்ளி நட்சத்திரங்கள் பல இருந்தும் , நீ ஒளிமயமாய் எம்விழியெங்கும் நிரம்பினாய் !
கருமேகங்களின் கரை படிந்தும்,நீ வெந்நிறம் கெடாது விண்ணி்ல் மிளிர்ந்து நின்றாய் !
பிறை உருவம் கொண்டு வளர்வதும் தேய்வதும் எனநீீ பண்வடிவில் காட்சியளிப்பாய்!
பல்வேறு கதைகளுக்கும் கவிதைகளுக்கும் அதிபதியாய், நீீ விளங்கி அவைக்கு அழகு சேர்த்தாய் !!
இவையனைத்தும்...
நான் செல்லும் வழியெங்கும் ஒளிவீசி , நீீ என்னை தொடரும் தோழமைக்கு என்றும் ஈடில்லை... - என் வெந்நிலவே !!!!!
- வி்க்கி
No comments:
Post a Comment