கண்களுக்கு இதமான இளவேனிற் காலை பொழுதில் ,
பார்கடலின் ஒற்றைக்கண் பார்வையாய் சூரியன் பிறக்க !!
வசந்தம் ஈடேறி பலவண்ணப்பூக்கள் பூத்துக் குலுங்க !!
அதில்,தேன்ச்சிட்டுக்கள் தேன் பருக சுற்றித்திரிய !!
தேனிசை தென்றலாக இனிதென்று குயில்கள் ஓசையிட !!
வயல் வரப்புகளின் பசுமை விழிகளை பறிக்க !!
வெண்கதிர்கள் பட்டு வெண்மேகங்கள் ஒளிரத் தொடங்க....
நித்தம் இதை கண்டு ரசிக்க நான் ,
விழித்தெழுந்து காத்திருப்பேன் தேநீர் கோப்பையுடன் !!
- அன்புடன் விக்கி
Really awesome vicky....A picturesque...a visual treat, capturing the charm and scenic beauty of nature and spring...
ReplyDeleteமிக்க நன்றி ராஜி..!!! :)
ReplyDelete