IndiBlogger - The Largest Indian Blogger Community

Saturday, 27 June 2015

போராடும் இயற்கையின் வளம்...!



வேர்கள் ஆசைபட்டது , மரமாய் வளர்ந்து மனிதனின் வியர்வை துடைக்க...!
இலைகள் ஆசைபட்டது , காற்றில் படர்ந்து மனிதனுக்கு நிழற்குடையாய் விளங்க..!
மலர்கள் ஆசைபட்டது , நற்மணம் வீசி மனிதனின் சுவாசம் புத்துண்ர்வு பெற...!
கனிகள் ஆசைபட்டது , மனிதனின் சுவை நரம்புகளை தித்திக்கச்
செய்ய..!
தண்டு ஆசைபட்டது இவையனைத்தையும் நிலைநிருத்தி மனிதனுக்குத் தன் தன்மையைக் காட்ட..!
விதைகள் ஆசைபட்டது மனிதனுக்குட்பட்ட இந்நற்குணங்களை பண்மடங்கு உயர்த்த..!
ஆனால் இதில் பயன்கண்ட மனிதனோ, இறைவனின் குணம் பெற்று விதை விதைக்க நேரமில்லாமல்..!
அரக்கன் குணம் பெற்று அதை அழிக்க பிறந்தவனாக உருவெடுப்பதும் ஏனோ..!!!!

                                                                                                  - அன்புடன் விக்கி

"Don’t make Trees rare, we should keep them with care"
                                                                              - Lend a hand to save trees

Friday, 12 June 2015

கண்ணோரம் காதல் வந்தால்...!




கருவிழிகளை கயல்விழிகளாய் கொண்டுள்ள பெண்ணே..!
உன் கண்களை கண்டநாள் அன்று விழித்தது என் உள்ளம் !
அதில் பெருகியது நேசம் என்னும் புது வெள்ளம்..!
உன் கைகளாகிய கரை சேர என் மனம் சொல்லும்..!
உன்னை காணாத நாள் துயரம் என்னை கொல்லும்..!
வாசம் வீச வந்தாய் நீ என் வாழ்வில் - அள்ளும்
பகலும் உன்னை எண்ணியே காத்திருப்பேன் எந்நாளும்
என் எண்ணம் உன்னோடுதான் கலந்திருக்கும் பெண்ணே....!

                                                                                                                      - அன்புடன் விக்கி

Tuesday, 9 June 2015

வசந்தத்தின் "தன்வச" ஈர்ப்பு ...!


கண்களுக்கு இதமான இளவேனிற் காலை பொழுதில் ,
பார்கடலின் ஒற்றைக்கண் பார்வையாய் சூரியன் பிறக்க !!
வசந்தம் ஈடேறி பலவண்ணப்பூக்கள் பூத்துக் குலுங்க !!
அதில்,தேன்ச்சிட்டுக்கள் தேன் பருக சுற்றித்திரிய !!
தேனிசை தென்றலாக இனிதென்று குயில்கள் ஓசையிட !!
வயல் வரப்புகளின் பசுமை விழிகளை பறிக்க !!
வெண்கதிர்கள் பட்டு வெண்மேகங்கள் ஒளிரத் தொடங்க....
நித்தம் இதை கண்டு ரசிக்க நான் ,
விழித்தெழுந்து காத்திருப்பேன் தேநீர் கோப்பையுடன் !!

                                                                                                         - அன்புடன் விக்கி

Tuesday, 2 June 2015

வழி மறந்த காதலின் வலி....!


கண்களிலே கனவிலே காதலிலே கரையும் காற்றாய் !!
நெஞ்சினிலே நனவிலே நினைவிலே நீங்கா நங்கையாய் !!
நீ வந்தாய் நேற்று....நறுமணம் வீச..!
எனதருகே நின்றாய்...திகைத்தேன் - நான்...!
எச்சில் விழுங்க வழி இல்லாமல் தவித்தேன்...!
சற்றென்று கரம் சேர்க்க கை எடுத்தேன்...அன்பே !
நீ  என்னை விடைபெற்றாய் இன்று ......வழியில்லா பாதையிலே !
உன் தடம் தேட வழியின்றி....உணர்ந்தேன் காதலின் வலியை !


                                                                                                     -விக்கி